இலங்கையில் ஆஸ்துமா (Asthma) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவாச நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை 6ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய் தொடர்பாக கவனம் செலுத்தினால் ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சையின் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாமல் ஆஸ்துமாவை திறம்பட கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.