• Sun. Oct 12th, 2025

தெருநாய் இறைச்சி விற்பதாக சந்தேகம்

Byadmin

May 5, 2025

தெருநாய்களை பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், அந்த தெருநாய்களை இறைச்சியாக்கி விற்பனை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எலஹெர வீதியிலும் தெருநாய்களைப் பிடிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், விலங்குகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றதா? என்ற சந்தேகம் உள்ளூர்வாசிகளிடையே கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான செல்லப்பிராணி நாய்கள், அவற்றின் உரிமையாளர்கள் இடம்பெயர்ந்த பிறகு, வழிதவறிச் சென்றுள்ளதாக சமூகப் பணியாளர் மற்றும் அம்பன விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதியான வை.எம்.எஸ். பண்டார (56) தெரிவித்தார்.

இந்த தெருநாய்கள் அடையாளம் தெரியாத குழுக்களால் சமீபத்தில், முறையாகப் பிடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன, இது சட்டவிரோத இறைச்சி வர்த்தகம் குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது, இருப்பினும் இதுவரை எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, மீன்பிடி வலைகள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய பலர் மொரகஹகந்த வீதியில் தெருநாய்களை சனிக்கிழமை மாலை (03), பிடிப்பதைக் காண முடிந்தது. கடந்த காலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன, குறிப்பாக நாவுல காவல் பகுதியில், நாய் இறைச்சி விற்பனை நடந்ததாகக் கூறப்படுகிறது, இது மீண்டும் நிகழும் என்ற அச்சத்தைத் தூண்டியது என்று பண்டார மேலும் கூறினார்.

அருகிலுள்ள வனப்பகுதிகளில் காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தாமல் வேட்டையாடுவது தொடர்பான தொடர்ச்சியான பிரச்சினையையும், நாய் இறைச்சி வேட்டை இறைச்சியுடன் கலந்து சட்டவிரோதமாக விற்கப்படலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

அப்பகுதியில் சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கான தெருநாய்கள், முறையற்ற முறையில் அகற்றப்படும் குப்பைகளில் கிடக்கும் உணவுகளை உண்பதை கண்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த விலங்குகளை அடையாளம் தெரியாத நபர்கள் பிடித்தது தொடர்பான பல சம்பவங்கள் சமீபத்திய வாரங்களில் பதிவாகியுள்ளன.

அம்பான விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் அளித்து, இந்த விஷயத்தில் தலையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *