• Sat. Oct 11th, 2025

பலஸ்தீனுக்காக சஊதி மன்னர் பைசல் கொடுத்த விலை

Byadmin

May 15, 2025

பலஸ்தீனுக்காக சஊதி அரேபிய மன்னர் பைசல் கொடுத்த விலை 

இஸ்ரேலை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த மன்னர் பைசல் சவுதி அரேபியாவின் முக்கிய மன்னர்களில் ஒருவர். அவர் 1906ம் ஆண்டு ரியாதில் பிறந்தர். 1964–1975 வரை சவுதி அரேபியாவின் மன்னராக இருந்தார். 

நோபல் பரிசுக்கு நிகரான பரிசை மன்னர் பைசல் விருது என அவரின் பெயரிலேயே சவுதி அரசாங்கம் ஆண்டுதோறும் இஸ்லாமிய சேவைக்காக வழங்கி வருகிறது. இவர் March 25, 1975ம் ஆண்டு அமெரிக்க சதியால் சவுதிக் கைக் கூலியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏன் கொல்லப்பட்டார்?

இவர் உஸ்மானிய ஆட்சியாளர் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் போன்றவர். பலஸ்தீன மண்ணிலிருந்து சியோனிசத்தை துடைத் தெறிய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டார்.

மன்னர் பைஸல் ஒரு நேர்மையான ஆட்சியாளர். மன்னர் பைஸல் தனது அரண்மனையில் ஒரு மிம்பர் செய்து வைத்திருந்தார். அதை எடுத்துச் சென்று பைத்துல் மக்திஸில் வைத்து தான் ஒரு குத்பா செய்ய வேண்டும் என்று கருதினார். குத்ஸை மீடபதற்காக பாகிஸ்தான் இராணுவத்தைக் கேட்டார். இதற்காக சவுதியின் ஒரு வருட பட்ஜட்டை தருவதாகக் கூறினார். 

ஆனால், பாகிஸ்தான் ஆட்சியாளர்களும், இராணுவமும் இஸ்ரவேலுக்கும் மேற்கிற்கும் அஞ்சியது. அதனால் அவர் ஒரு பிரார்த்தைனைய மேற்கொண்டார். யா அல்லாஹ்! என்னை ஒரு கோழையாக மரணிக்கச் செய்யாதே! அந்தப் பிரார்த்தனை போல் அவர் ஷஹீதாக்கப்ட்டார்.

அது எப்படி ஆனது?

அவர் பலஸ்தீனை மீட்க ஆவல் கொண்டபோது, அவரை அமெரிக்கா மிரட்டியது. பொருளாதாரத் தடைவிதிக்கப் போவதாக எச்சரித்தார்கள். இன்று ஆட்சி சுகம் அனுபவிக்கும் கோழைகள் போன்று அவர் மிரளவில்லை. அமெரிக்காவை அவர் மிரட்டினார்.

1969ம் ஆண்டு குத்ஸ் எரிக்கப்ட்டபோது கொதித்துப் போனார் மன்னர் பைசல்.

அவர், இஸ்ரேலுக்கு எதிரான ஒக்டோபர் யுத்தத்தின்போது, மேற்கு நாடுகளுக்கு “பெட்ரோல்” விநியோகிப்பதை “நிறுத்திய” போது- அன்றைய வெளிவிவகார செயலரான கேஸ்பர் வேயன்பேர்கரை உடனே சவூதிக்கு விளக்கம் கேட்க அனுப்பியது அமரிக்கா. 

விமான நிலையத்திலிருந்து அமெரிக்க வெளிவிவகார செயலாளரை கொதிக்கும் பாலைவனத்தில் ஏற்பாடு செய்யப்ட்ட எந்தவித வசதிகளுமற்ற Tent க்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு தட்டில் ரொட்டியும் இன்னொரு தட்டில் பேரீச்சப்பழமும் ஒரு குவழையில் பாலும் மறு குவழையில் ஸம்ஸம் தண்ணீரும் வைக்கப்ட்டிருந்தது.

அதை கேஸ்பர்வேயன் பேர்கருக்குகாட்டி, “இது தான் எங்கள் தலைவர் மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை. இதை உண்டு கொண்டு தான் அவர் உலகை உலுக்கினார். அந்த மாமனிதரின் வாழ்வுக்கு நாங்கள் திரும்பத் தயார். முடிந்தால் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்துக் கொள்ளட்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

மன்னர் பைசலுக்குத் தேவைப்பட்டதெல்லாம் எந்த சொகுசுமில்லாமல் எங்களால் எவர் தயவுமின்றி வாழ முடியும் என்று அமெரிக்கர்களுக்கு உணர்த்தவேண்டும் என்பதே.

அவர் அல் குா்ஆனை மனனமிட்ட மன்னராக இருந்தார். ஐரோப்பாவுக்கு அஞ்சாமல் வீர மரணம் அடைந்தார்.

வேயன்பேர்கேர் அமெரிக்கா திரும்பும் முன்னர் ஒரு வார்த்தையை மன்னரிடம் சொல்லி விட்டு சென்றான்.

அந்த மந்திர வார்த்தை இதுதான்

“YOU WILL HAVE TO PAY FOR THIS”

மன்னர் பைசல் பலஸ்தீனுக்காகக் கொடுத்த விலை அவரது விலை மதிப்பற்ற உயிர்.!

இவ்வாறான அமெரிக்காவின் மிரட்டல்கள்தான் இன்று வரை அரபு நாட்டு தலைவர்களை அமெரிக்க அடிமைகளாக்கி வைத்திருக்கின்றன. ஏனோ மன்னர் அப்துல் அஸீஸின் வாரிசுகளில் இவர் போன்று மற்றவர்கள் இல்லை. வரலாறு மீண்டும் மன்னர் பைசல் போன்றவர்களை வேண்டித் தவமிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *