• Sun. Oct 12th, 2025

வழிந்தோடிய பெட்ரோல், டீசல் – நீண்ட வரிசையில் காத்திருந்து சேகரித்த மக்கள்

Byadmin

May 15, 2025

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் பயணித்த பௌசர் ஒன்று புதன்கிழமை மாலை (14) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக  வெளிமடை நோக்கி பயணிக்கும் போதே  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பௌசரில் 33.000 ஆயிரம் லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வெவ்வேறாக பிரித்து  இருந்ததாகவும் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வெளியேறி வீணாகியுள்ளதுடன் குறித்த பகுதியில்  பரவியுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பௌசர் கவிழ்ந்ததையடுத்து வழிந்தோடிய பெட்ரோல் ,டீசலை பெருந்திரளான பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சேகரித்துக் கொண்டனர் .

எனினும் குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *