• Sun. Oct 12th, 2025

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி மீது தாக்குதல்

Byadmin

May 24, 2025

பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் தாக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை  செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவனை  நேற்று  (23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

  குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்யவது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

 அதையடுத்து அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாணவியை தாக்கிய சக மாணவனை நேற்று இரவு பொலிசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *