பொது ஆலோசனைகளின் போது, பெறப்பட்ட 500 க்கும் மேற்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இன்று திங்கட்கிழமை (9) தொடங்கும் வாரத்திற்குள் முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெயநாத் ஹேரத் கூறியுள்ளதாவது,
“ஆலோசனைகளின் போது 500 க்கும் மேற்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி சமர்ப்பிப்புகளைப் பெற்றோம், அவற்றை மறுபரிசீலனை செய்யும் செயல்முறை கடந்த வார இறுதிக்குள் நிறைவடைந்தது. இப்போது தொடர்புடைய பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, அவை ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும். இன்று
திங்கட்கிழமை (9) முதல் தொடங்கும் வாரத்திற்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
மேலும், இலங்கை மின்சார சபை ஜூன் முதல் டிசெம்பர் வரையிலான காலத்திற்கு 18.3% கட்டண உயர்வைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.