கம்பஹாவில் சில பகுதிகளில் புதன்கிழமை (11) காலை 08.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை (10 மணி நேரம்) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா – எல , கந்தானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
