• Mon. Oct 13th, 2025

யாழில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

Byadmin

Jun 16, 2025

யாழ் சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி உணவருந்திவிட்டு இருந்தவேளை நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டு முற்றத்திற்கு வந்தவேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து வீட்டினர் அவசர நோயாளர் காவு வண்டி அழைத்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டியில் இருந்த பணியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர்.

இதனையடுத்து நேற்றையதினம் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *