• Sun. Oct 12th, 2025

சிறுமியின் விளையாட்டால் பாதசாரி பலி; தாயார் கைது

Byadmin

Jun 16, 2025

சிறுமியின் விளையாட்டால் பாதசாரி பலி; தாயார் கைது

வாதுவ பிரதெசத்தில் காரை ஓட்டி வந்த ஒரு பெண்ணின் இரண்டு வயது சிறுமி , தாய் மீது திடீரென குதித்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கர வண்டி மற்றும் ஒரு சிறிய லொறி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துல் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காரை ஓட்டி வந்த பெண் தனது இரண்டு வயது மகளுடன் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார்.

ஆராதனையின் பின்னர் , களுத்துறையிலிருந்து பாணந்துறை நோக்கி வீட்டுக்கு செல்வதற்காக காரின் பின் இருக்கையில் 2 வயது மகளை இருத்தி விட்டு, காரை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் 2 வயது சிறுமி, காரின் ஓட்டுனர் இருக்கையில் குதித்ததாகவும், இதனால் கார் ஓட்டிக்கொண்டிருந்த தாயின் கட்டுப்பாட்டை இழந்து கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன்போது , கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் அருகில் நின்ற பாதசாரி மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் பாணந்துறை அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் காரை ஓட்டி வந்த பெண் கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *