• Sun. Oct 12th, 2025

காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி பலி

Byadmin

Jun 17, 2025

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

காட்டு யானையின் தாக்குதலால் காயமடைந்து வீதியில் விழுந்து கிடந்த குறித்த நபர், அந்தப் வீதியில் பயணித்த பேருந்து மூலம் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவர், 53 வயதுடைய வீரலந்த என்ற நபராவார். இவர் அரலகம்வில பகுதியில் வசித்து வந்தவர் மற்றும் தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஆவார். 

அவர் பொலிஸ் நிலையத்திற்கு பணிக்காக சென்று கொண்டிருந்தபோது இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *