• Sun. Oct 12th, 2025

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு

Byadmin

Jun 18, 2025

யாழ். அரியாலை புங்கங்குளம் ரயில் தண்டவாளத்தில் குந்தியிருந்த இளைஞர் ஒருவர் ரயில் மோதியலில் உயிரிழந்தார்.

கேணியடி அரியாலையைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண நொதோன் வைத்தியசாலையில் கடமைபுரியும் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் புங்கங்குளம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாவத்தில் இருந்துள்ளார்.

அந்த சமயம் அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ். புகையிரத நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
அங்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *