• Sun. Oct 12th, 2025

ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது

Byadmin

Jun 18, 2025

ஒரு கோடி ரூபாவை கப்பமாக கேட்டு, அதிலிருந்து 20 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரியதாகவும் அதில் 20 இலட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், எஞ்சிய தொகையை செலுத்தாவிடின் குழந்தையை கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி, படல்கம பொலிஸ் பிரிவில் உள்ள மல்லவகெதரவில் வசிக்கும் முறைப்பாட்டாளர், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பணியகத்திற்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இது தொடர்பாக, நீர்கொழும்பு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சீதுவ பொலிஸ் பிரிவில் உள்ள தம்பத்துரை பகுதியில் நேற்று (17) நடத்திய சோதனை நடவடிக்கையில், ஒரு கோடி ரூபாவை கப்பமாக கோரிய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து படல்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

சந்தேக நபர்கள் 32 மற்றும் 46 வயதான மெட்டியகனே மற்றும் கொட்டுகொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

விசாரணையில், இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், முறைப்பாட்டாளரை மிரட்ட இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரியவந்தது. 

மேலும், இந்த குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பொம்மை துப்பாக்கி, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கப்பமாக பெற்ற பணத்திலுருந்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பல கையடக்க தொலைபேசிகள், அந்த தொலைபேசிகளில் உள்ள அனைத்து சிம் கார்டுகள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் கார்டுகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் அனைத்து ஆவணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *