புத்தளம் , பாலாவி – கற்பிட்டி வீதியில் வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலாவி பகுதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தாயான அபூதாலிப் பாத்திமா ரிஸானா (வயது 40) எனும் பெண்ணே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். .
பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் குறித்த பெண் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதுடன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தியுள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.