யாசகம் பெற்ற மற்றும் வீதியோரங்களில் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தற்போது உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் யாசகம் பெறுதல் மற்றும் பொருள்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறுவர்களைக் கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் மற்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.