கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா.
முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மருத்துவர்களுடன் நடராஜன் அமர்ந்திருக்கும் புகைப்படம் நேற்று மாலை வெளியானது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!