அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க. அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஜனாதிபதியின் பரிந்துரை குறித்து இறுதி முடிவை எடுக்க அரசியலமைப்பு சபை புதன்கிழமை (23) கூட உள்ளது.
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ 27 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அவர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்த உள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதியரசர்களில் ஒருவரான ப்ரீதி பத்மன் சூரசேன, நீதித்துறை சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
நாட்டில் பல உயர்மட்ட வழக்குகளில் நீதிபதியாகவும் சூரசேன பணியாற்றியுள்ளார். ஐஜிபி தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் அவர் பணியாற்றுகிறார்