• Sat. Oct 11th, 2025

வடபுல முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்பு நினைவு நாள் அனுஸ்டிப்பு..

Byadmin

Oct 30, 2017

வடபுல முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்பு நினைவு நாள் அனுஸ்டிப்பு..

1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்நினைவுநாள் அனுஷ்டிப்பை

இன்று(30)  காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர்.

இதன் போது அப்பகுதியில்  கடும் மழைக்கு மத்தியிலும்  ஒன்று கூடிய யாழ்முஸ்லீம் மக்கள்  ஒக்டோபர்  30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள்தாம்  ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும்இதமது  சொந்தஇருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்டமுஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில்இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது  வாழ்ந்துவருகின்றனர் .
எனவே அவர்களை  சொந்தமண்ணில்  இன்றுடன் 27 வருடங்கள்கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளைமதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள்எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை  ஆறாத்துயரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
எனவே தான்  எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும்மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின்மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்றுகேட்டுக்கொள்கின்றோம் என இதன் போது ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.
-பாறுக் ஷிஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *