• Sat. Oct 11th, 2025

இலங்கையில் 4 மீன்களுக்கு தடை விதிப்பு

Byadmin

Sep 16, 2025

மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் தடையானது ஆக்கிரமிப்பு மீன் இனங்களான Piranha, Knife Fish, Alligator Gar மற்றும் Redline Snakehead ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கூறிய மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்யவோ, நீர் நிலைகளில் விடவோ, கரைக்கு கொண்டு வரவோ, கொண்டு செல்லவோ, வாங்கவோ, விற்கவோ, விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ, வைத்திருக்கவோ, இறக்குமதி செய்யவோ மற்றும் ஏற்றுமதி செய்யவோ முடியாது.

மேற்கண்ட விதிமுறைகள் உயிருள்ள மீன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

1998 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க இலங்கை மீன்வளர்ப்பு மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, இலங்கையின் தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணைக்குழுவின் (NAQDA) முன் அனுமதி பெறப்பட்டால், நுகர்வுக்காக இயற்கை நீர்நிலைகளில் இருந்து உயிருள்ள மீன்களைப் பிடிக்கும்போது மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று அமைச்சு கூறியுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின் படி, இந்த மீன்கள் அதிகளவான இனப்பெருக்கத்தின் அடிப்படையில் வேகமாகப் பரவி மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன் கொண்டவை என்பதால் அவை ‘ஆக்கிரமிப்பு இனங்கள்’ என்று வரையறுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *