100 வயது பெண்மணி பதுளை நோனா ஜம்ஜம் வபாத்தானார்.
பதுளை – பதுளுயவைச் சேர்ந்த நோனா ஜம்ஜம் முத்தலிப் நூர்தீன் (வயது 100) நேற்று முன்தினம் (29) இரவு 9.00 மணியளவில் தனதில்லத்தில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இவர் நீண்டகாலமா ஆடை வடிவமைப்பாளராகவும், மணப்பெண் அலங்கரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இவரின் சகோதரியான நோனா ஜாயா ஜமால் தீன் (வயது 98) பதுளையில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஐந்து பிள்ளைகளின் தாயான அன் னாரின் ஜனாஸா நேற்று திங்கட்கி ழமை மாலை அஸர் தொழுகை யின் பின்பு பதுளை அன்வர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.