சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் – மங்கள
இலங்கையர் அபிவிருத்தி கண்ட இனத்தவராக மேம்படவேண்டுமாயின் சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ம்ங்கள சமரவீர தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பு வகுப்பதன் மூலம் நாடு புதிய திசையை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கும். அரசியல் யாப்பின் நடவடிக்கை குழுவின் அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்கமைவாக நாட்டு பிரஜைகள் மூலமாக பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டுக்கு அரசியல் யாப்பொன்று தேவையா என்று கூறும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும அன்று வெண்தாமரையை எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாக சென்று ஒற்றையாட்சி என்ற சொல்லை நீக்கிய அரசியல் யாப்பிற்கே ஆகும்.
காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கூறும் அரசியல் யாப்பையே அவர் முன்னெடுத்தார்.
இந்த யுகத்தில் பாரிய பிரச்சினையில் அழகான சொற்களை புறந்தள்ளி தப்பிச் செல்லவேண்டாம். இலங்கையின் பாரிய பிரச்சனை இனப்பிரச்சனையாகும். சிலருக்கு இந்த பிரச்சனை இல்லை. ஓரளவுக்கு அல்லது அறிவுள்ள எந்தவொரு நபரும் இனப்பிரச்சினை இல்லை என்று சிந்திக்க முடியுமா. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இலங்கை தேசத்தை உருவாக்குவதற்காக அரசியல் யாப்பு குறித்து பேசியுள்ளனர். நீண்ட கால வரலாறு முழுவதும் தேவையாக இருந்த பல்வேறு மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் முன்வந்துள்ளது.
கடும்போக்காளர்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை முன்வைத்து வழமை போன்று நிராகரித்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இலங்கை மக்கள் வழங்கிய வலுவான மக்கள் ஆணைக்கு அமைவாக அவர் ஒருவருட காலம் நிறைவடைந்தபின்னர் உறுதியளித்திருந்த இந்த அரசியல் பேரவை அமைக்கப்பட்டிருந்தது. இதில் அவர் சதிசெய்யவில்லை . பகிரங்கமான முறையில் செயற்படுகின்றார்.
அனைவரதும் கருத்துக்களை பெற்று இவ்வாறான ஒரு விவாதம் நடத்தப்படுகின்றது. உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஜனநாயகம் என்பது இதுவேயாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தையின் மூலம் பெரும்பாண்மையினரின் உடன்பாட்டை பெறமுடிந்தது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக என்று கூறியவர்களுக்கு இது தெரியாது. ஜனநாயத்தை மதிக்கு மக்களுக்கு இது என்ன என்பது புரியும். இது சரியான சந்தர்ப்பமாகும். சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில் எமக்கு பெரும்பாலான சந்தர்ப்பம் இல்லாமல் போனது. தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது. கடந்த 70 வருட காலமாக அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பு அடிப்படையில் சில மாற்றங்களே ஆகும்.
நிலையான, நீண்டகால சமாதானத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். சமத்துவமிக்க மக்கள் சமூகத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த முடியும். பிளவுபடாத வன்முறையற்ற நாடொன்றை காண்பதற்கு இவர்கள் விரும்புகின்றனர். இளைஞர்கள் பலரின் உயிரை நாம் இழந்தோம். வறிய மக்களான சிங்களவர் , தமிழ் இனத்தினர் துன்பப்பட்டனர். மீண்டும் அவ்வாறானவொரு வன்முறை ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. புதிய நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் ஆற்றல் எமக்கு இருக்கவேண்டும்.
தற்பொழுது பல அறிக்கைகள் அரசியல் யாப்பு செயற்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அனைவரதும் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும். பயனுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டும். சிறந்த அடிப்படை , நம்பிக்கை மிகுந்த அரசை கட்டியெழுப்புதல் , ஸ்திரத்தன்மை , மறுசீரமைப்பான நாடொன்றை கட்டியெழுப்புதல் வேண்டும்.
புதிய அரசியல் யாப்பு முன்னெடுப்பதன் மூலம் நாடு புதிய திசையைநோக்கி பயணிக்க முடியும். 70வருட கால அபிவிருத்தியை நாம் அடையவில்லை இனம் ,மதம் ,கட்சி என்ற ரீதியில் நாம் சிதறுபட்டு இருந்தோம். நாடு என்ற ரீதியில் எவ்வாறு முன்னோக்கி பயணிப்பது என்பது குறித்து நாம் கலந்துரையாட வேண்டும். அரசியல் யாப்பின் மூலம் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யமுடியும்.
நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசியல் யாப்பை ஏற்படுத்துவதற்கு யார் எதிர்க்கமுடியும். பொருளாதார சுபீட்சம் எமது நாட்டு மக்கள் மத்தியில் இல்லாமல் போகின்றது. மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்லவேண்டுமா?. இலங்கையர் ஆகிய நாம் வளர்ச்சிகண்ட இனத்தவராக மேம்படவேண்டுமாயின் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நம்பிக்கை ஏற்படத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.