தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்நாட்களில் அடையாள அட்டைகளை அச்சிடும் பணி முறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக தினமும் திணைக்களத்திற்கு வரும் பிற பொது விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.