ஏ.டி.பி இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர், ஆறாம் நிலை வீரரான டெய்ல்டர் பிறிட்ஸ் ஆகியோர் வென்றனர்.
எட்டாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர் அலிசிம்மை செவ்வாய்க்கிழமை (11) எதிர்கொண்ட இத்தாலியின் சின்னர், 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார்.
இதேவேளை ஒன்பதாம் நிலை வீரரான லொரென்ஸோ முசெட்டியை திங்கட்கிழமை (10) எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பிறிட்ஸ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.