அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரின் ஆரம்பத்திலேயே தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் அல்லது அவுஸ்திரேலியாவில் இன்னொரு தொடரை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடுமென இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டூவர்ட் ப்ரோட் தெரிவித்துள்ளார்.
இறுதியாக 2015ஆம் ஆண்டே ஆஷஸை இங்கிலாந்து வென்றதுடன், அவுஸ்திரேலியாவில் வைத்து 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெல்லாததுடன், 5-0, 4-0, 4-0 என மூன்று தடவையும் அங்கு தொடரை இழந்துள்ளது.
ஆஷஸை வெல்வதற்கான வாய்ப்பொன்றைக் கொண்டிருப்பதற்கு முதலாவது டெஸ்டை இங்கிலாந்து வெல்ல வேண்டுமெனவும், முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெல்லா விட்டால் தோற்பதற்கான போராட்டத்தில் நீங்கள் இருப்பீர்களென ப்ரோட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், ஜொஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரே கவனம் பெறுகையில் குஸ் அட்கின்ஸனிடமிருந்து சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்ப்பதாக ப்ரோட் தெரிவித்துள்ளார்.