போக்குவரத்து சட்ட மீறல்களுக்கான 25,000 ரூபா தண்டப்பண சட்டம் இன்று முதல் அமுலுக்கு…
போக்குவரத்து சட்ட மீறல்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பண சட்டம் இன்று(01) முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ளது.
போதையில் வானத்தை செலுத்துதல், காப்புறுதி சான்றிதழ் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துதல் , ரயில் கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு குறித்த இந்த தணடப்பணம் விதிக்கப்படவுள்ளது.
இன்னும், வயது குறைந்த சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதில் ஊக்குவிக்கப்படும் பட்சத்தில் அதற்காக 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.