தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரோசி’யை களமிறக்குகிறது ஐ.தே.கட்சி..
முன்னாள் அமைச்சரும், கொழும்பு மேற்கு அமைப்பாளருமான ரோசி சேனநாயக்கவை இம்முறை கொழும்பு மாநகர சபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோசி சேனநாயக்க தற்போது, பிரதமர் செயலகத்தின் பிரதி தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.