• Sat. Oct 11th, 2025

நான்கு வருடங்களில் பகுதிநேரமாக அல்குர்ஆனை முழுமையாக மனனம்.

Byadmin

Nov 1, 2017

நான்கு வருடங்களில் பகுதிநேரமாக அல்குர்ஆனை முழுமையாக மனனம்.

புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இயங்கக்கூடிய அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் பகுதிநேர
அல்குர்ஆன் மனனப்பிரிவில் கற்கக்கூடிய அமீர் அக்பர் முஹம்மது ஸிஹான் என்ற மாணவர் 31.10.2017 செவ்வாய் கிழமை அல்குர்ஆனை பூர்த்தியாக மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

சுமார் நான்கு வருடங்களில் பகுதிநேரமாக அல்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள இவர் இந்நிறுவனத்தில் அல்குர்ஆனை பூர்த்தியாக மனனம் செய்துள்ள நான்காவது மாணவர் ஆவார். ஏற்கனவே மூன்று மாணவர்கள் நான்கு வருடங்களில் பகுதிநேரமாக அல்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளதுடன் ஒரு மாணவர் ஷரீஆ கல்வியை தொடர்வதற்காக முழுநேர மத்ரஸாவுக்கு சென்றுள்ளார். ஏனைய இருவரும் இந்நிறுவனத்தில் அல்குர்ஆனை மீட்டல் (தௌர்) செய்து கொண்டிருக்கின்றனர்.

புகைப்படத்தில் இருக்கக்கூடிய மூவருமே தற்பொழுது இந்நிறுவனத்தில் இருக்கக்கூடிய அல்குர்ஆனை பூர்த்தியாக மனனம் செய்துள்ள மாணவர்களாவர்.

முஹம்மத் நஸார் முஹம்மத் நபீத்
முஹம்மத் பரீட் முஹம்மத் ஹாரித்
அமீர் அக்பர் முஹம்மத் ஸிஹான்.

— Hizbullah Ibraheem-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *