• Sat. Oct 11th, 2025

சாய்ந்தமருதுக்கு தனியான சபை இம்முறை கைகூடாது அமைச்சா் பைசா் முஸ்தாபா

Byadmin

Nov 2, 2017

சாய்ந்தமருதுக்கு தனியான சபை இம்முறை கைகூடாது அமைச்சா் பைசா் முஸ்தாபா

கல்முனை சாய்ந்தமருது –  தனியான பிரதேச சபை கேட்டு  கடந்த பல ஆண்டுகளாக  அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அத்துடன் அங்கு கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள்,  உண்னாவிரதங்கள் ஹர்த்தால்  நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. இது    கடந்த 3 நாற்களாக  நடைபெற்று வருகின்றன.  இது பற்றி அமைச்சா்  பைசா்  அவா்களே  விளக்கமளிப்பீா்களாக என   அவரது ஊடக மநாட்டில்   என் ்கேள்வி எழுப்பினேன்.  அதற்கு அவா்  பதில் தருகையில் –
அமைச்சா் பைசா் தெரிவித்தாவது –
சாய்ந்தமருதுக்கு தனியான தொரு பிரதேச சபை கோரிக்கை இருந்து வருகின்றது. அது பற்றி நான் நன்கு அறிவேன்.  அதனை அங்கு தோ்தல் காலத்தில் பிரதமரும் தருவதாக சொல்லியிருந்தாா்.  அதனை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு  சாய்ந்தமருது சபைக்கான சபையை அனுமதிப்பதற்கு உரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். ஆனால் அங்கு  கல்முனையை  மாநகர சபையை 4 சபைகளாக பிறிக்க கோறி இன்னொரு  பிரிவினா் அரசியல் அழுத்தங்களை தொடுத்தாா்கள். .  ஆகவே தற்பொழுது இதனை என்னால் செய்ய முடியாது.   ஏற்கனவே நுவரேலியாவுக்கு 4 சபைகளும் ,  பொலநருவையை  மாநகர சபையாகவும்  தரமுயா்த்தி  சபைகளுக்கும் இம்முறை  தோ்தல் நடைபெறும்.  கல்முனை மாநகர சபையாகவே இம்முறை தோ்தல் நடைபெறும்.
 கல்முனை மாநகரசபை  அல்லது 4 சபையாகவ 2 ஆகவா பிரிப்பது  பற்றி அங்குள்ள அரசியல்  கட்சிகள், தமிழ் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிபுக்கு வந்தால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் தோ்தலிலேயே அதனை பிரிக்க முடியும்.  தற்பொழுது  சாய்ந்தமருதுக்கு தனியான சபையை வழங்க அங்குள்ள அரசியல்கட்சிகள் ஒருமித்த முடிபுக்கு வரல் வேண்டும்.  எனவும் பைசா் பதிளளித்தாா்.
நுவரேலியாவுக்கே  சபைகள் பற்றி அமைச்சரபை பத்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.  அது அனுமதிக்கப்பட்டுள்ளது.   இதற்கு  கபினட் அனுமதி தேவையில்லை.  என்னால் அனுமதிக்க முடியும். இருந்தும் அனுமதி பெறப்பட்டுள்ளது.  எனத் தெரிவித்தாா்.

இன்று(1)  உள்ளுராட்சித் தோ்தல்களை நாடத்துவதற்காக  தோ்தல் ஆணையாளருக்கு  வா்த்தமானி அறிவித்தலை  அமைச்சா் பைசா் முஸ்தபா தனது அமைச்சில் வைத்து கைச்சாத்திட்டாா்.   அதன் பின்னா்  தேர்தல் ஆணையாளா் தோ்தல் நடாத்துவதற்கான  நடவடிக்கைகளை அறிவிப்பாா் என தெரிவித்தாா்.

-அஷ்ரப் ஏ சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *