கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க கீதா குமாரசிங்க தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் இன்று(02) உறுதி செய்துள்ளது.
குறித்த மனு இன்று(02) பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரட்டைக் குடியுரிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, குறித்த இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.