மஹிந்த விடுக்கும் கடும் எச்சரிக்கை!
இலங்கையில் மத ரீதியான யுத்தம் ஒன்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய அரசியலமைப்பினை கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பௌத்த மதம் தொடர்பில் எதுவும் மாற்றம் நிகழுமாயின் பேரனர்த்தம் ஏற்படும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
கண்டி உடுதும்பர, கஹடலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியமைப்பினால் 9 மாகாண அரசியல்வாதிகளிடம் அடி வாங்கும் நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது அனைத்து தரப்பையும் அழிவை நோக்கி கொண்டு செல்லும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.