பால்மா கிலோ 100 ரூபாவால் அதிகரிக்க வாய்ப்பு
பால் மாவின் விலையை கிலோவிற்கு 100 ரூபாவால் அதிகரிக்கஅனுமதிவழங்குமாறு அல்லது அதற்கான இறக்குமதி வரியாகஅதிகரிக்கப்பட்டுள்ள 15 % மேலதிக வரியை நீக்குமாறு பால் மா உற்பத்திநிறுவனங்கள் நிதி அமைச்சிடமும் நுகர்வோர் அதிகார சபையிடமும்
வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக சந்தையில் பால் மா மெட்ரிக் டொன் ஒன்றில் விலை 100 டொலர்களால்அதிகரித்துள்ள அதேவேளை நிதி அமைச்சு முன்னர் இல்லாத 15% பொருமதிசேர் வரியை அறிமுகப்படுத்தியுள்ளதால் தற்போது உள்ள விலைக்கு பால் மாவை நுகர்வோருக்கு வழங்க முடியது என பால் மா உற்பத்தி நிறுவனங்கள்குறிப்பிட்டுள்ளன.
தற்போது 400 கிராம் பால் மா 325 க்கும் கிலோ ஒன்று 810 க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.