ஜும்ஆ பள்ளிவாசலில், இலவச மருத்துவ முகாம் – பௌத்தபிக்கு புகழாரம்
கொழும்பு கிருலப்பனை ஜம்ஆப் பள்ளிவாசலில் கிருலப்பனை பொலிஸ்- இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றை இன்று 5ஆம் திகதி) காலை 08- பி.பகல் 04.30 மணிவரை – நாடத்தியது. இதில் இப்பிரதேசத்தில் வாழ் மூவினங்களையும் சாா்ந்த மக்கள் கலந்து கொண்டனா். தேசிய வைத்தியசாலையில் உள்ள 25க்கும் மேற்பட்ட முஸ்லீம் சிங்கள தமிழ் டொக்டா்கள் இணைந்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து அவா்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. இந் வைத்தியமுகாமுக்கு ரிச்சாட் பீரிஸ் நிதி க் கம்பணியின் நிறைவேற்றுப் பணிப்பாளா் கே.எம். எம். ஜபீா் அனுசரனை வழங்கினாா்.
இந் நிகழ்வில் கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பள்ளிவாசல் நிர்வாகத்தினா், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, அமில தேரோ ஹிந்து. கிரிஸ்த்துவ மதத் தலைவா்களும் கலந்து கொண்டு இப் நல்ல பணியை ஆசிர் வதித்தனா்.
பள்ளிவாசால் ஒரு சமுகத்திற்கு மதச சடங்கு மட்டுமன்றி அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வு ஒற்றுமை வளா்ந்துள்ளது என தேரா் உரையாற்றினாா்.
கிருலப்பணையில் பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கிடையே எவ்வித மத வேறுபாடுகள், இனரீதியான செயற்பாடுகள் இதுவரை நடைபெற்வில்லை இங்கு வாழ் சகல சமுகங்களும் அன்னியோண்னியமாகவும் புரிந்துணா்வுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனா் என பொலிஸ் பொறுப்பதிகாரி உபுல் ரணசிங்க கருத்து தெரிவித்தாா்.
-அஷ்ரப் ஏ சமத்-