அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் .. – போக்குவரத்துக்கு பாதிப்பு
கண்டி – கொழும்பு வீதி மாவனெல்லை – கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனேதென்ன – கம்பளை வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே, குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.