• Sun. Oct 12th, 2025

இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்

Byadmin

Nov 14, 2017

இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்

வர்த்தமானி அறிவித்தலின் படி பல்வேறு வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதி வரி குறைப்புக்கள் இன்று(14) முதல் அமுலாகும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி அசித்த திலக்கரத்ன;

வர்த்தமானி அறிவித்தலில் வழங்கப்பட்ட விலைக் குறைப்புக்கான பொருட்களின் விலைகள் அடங்கிய பட்டியல் நுகர்வோர் அதிகார சபையிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விலைக் குறைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் சபையின் ஒப்புதல் கட்டாயமானது. அவர்களில் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இன்று(14) முதல் வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த எட்டாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர சில வகையான அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைப்புக்கான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *