பொது போக்குவரத்து சேவைக்கு எந்தவொரு நிவாரணங்களும் இல்லை.. – கெமுனு குற்றச்சாட்டு
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவைக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, கொழும்பில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இது குறித்து தெரிவிக்கையில்;
அரச பேரூந்துகள் தனியார் பேரூந்துகள் மற்றும் தொடரூந்து சேவைகள் உள்ளிட்ட எந்த பொது போக்குவரத்துக்கும் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.
இதனைத் தவிர்த்து சிறிய ரக வாகனங்களுக்கு சலுகைகள அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து கடும் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, பொது போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.