பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஆஜராகினார்.
முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இது தொடர்பில் தௌிவுப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தது.
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடிவேல் சுரேஷ், மனோ கணேஷன் உள்ளிட்ட பாராளுன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகைத் தந்துள்ளனர்.