(படங்கள்) மஹிந்த ராஜபக்ச கௌரவ அதிதியாக கலந்துகொண்ட, ஏ.எச்.எம். அஸ்வர் பற்றிய ஞாபகார்த்த நிகழ்வு
காலம் சென்ற முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வர் பற்றிய ஞாபகார்த்த
அவா் பற்றிய ”அஸ்வர் எ பாலிமென்டேரியன்” எனும் நுால் வெளியீடும் அன்மையில் கொழும்பு 07 ல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை அவர் பதவி வகித்த அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி, அகில இலங்கை முஸ்லீம் கல்வி மாநாடு, முஸ்லீம் மீடியா போரம் ஆகியன இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சபாநாயகா் கரு ஜயசூரிய, கௌரவ அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டனா்.
அத்துடன் இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைதீன், அஸ்வர் பற்றி உரையாற்றினார். அவர் பற்றி நூலில் அவருடைய மைத்துனரான கலாநிதி கரிஸ். இசட். டீன் தொகுத்து வெளியிட்டார் நூலின் முதற்பிரதியை ஊடகவியலாளர் இர்சாத் ஏ காதர் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
மேலும் , முஸ்லீம் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ஹலீம், முன்னாள் அமைச்சர் ஏ.எல் எம் அதாவுல்லா , உட்பட முஸ்லீம் , பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாட்டுத் தூதுவர்கள் முன்னாள் அமைச்சர்னி குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-அஷ்ரப் ஏ சமத்-