காலி வன்முறை தொடர்பில் பொய்யான தகவல்களை பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை…
காலி – கிங்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் பொய்யான தகவல்களை பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக செயற்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சில சமூக ஊடகங்களினூடாக கிங்தொட்ட அசம்பாவிதம் தொடர்பில் பொய்யான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாகவும் குறித்த பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் இடையில் அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவே குறித்த பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அவ்வாறு பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.