தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக கூடுகிறது
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(22) அவசரமாக கூடவுள்ளதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.