File ஐ மேசை மீது வைத்துவிட்டு, தென்கொரியா சென்ற ஜனாதிபதி – அநுர கடும் விமர்சனம் ——————————————————————–
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரிய விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போதைக்கு 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக ஏனைய 40 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிழைகளை நீக்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட ஜனாதிபதியின் கையொப்பம் தேவை. ஆனால் அந்தக் கோப்பை அப்படியே மேசை மீது வைத்துவிட்டு ஜனாதிபதி தென்கொரியா விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
உண்மையில் அவருக்கு இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை விட தென்கொரிய விஜயம் முக்கியமானதாகிப் போய்விட்டதா? இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.