மங்கள’வின் வரவு செலவுத் திட்டதிற்கு ஜனாதிபதி பாராட்டு…
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெறும் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று(04) கலந்து கொண்டு ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில்;
“..இம்முறை வரவு செலவுத்திட்டம் நிலைபேறான அபிவிருத்தியின் இலக்கை அடைவதற்கு உந்து சக்தியாக அமையும்..
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் இலவச சுகாதார சேவையையும், இலவச கல்வியையும் உறுதிப்படுத்த சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இந்நாட்டின் இலவச சுதந்திர சேவையையும், இலவச கல்வியையும் உறுதிப்படுத்த முடிந்துள்ளதுடன் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கடந்த 3 ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது… ”
இன்னும், ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் பொலநறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான வைத்தியசாலை எதிர்வரும் வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாகவும்” ஜனாதிபதி தெரிவித்தார்.