• Mon. Oct 13th, 2025

இதுவரை 75 ஆயிரம் ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகம்…

Byadmin

Dec 6, 2017

இதுவரை 75 ஆயிரம் ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகம்…

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் தொழிநுட்பத்திலான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில் இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடையாள அட்டையை பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 1500 பேருக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  15 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை கோருவோருக்கும் தமது தேசிய அடையாள அட்டை சீர்குலைந்து காணாமல் போனோர் உள்ளிட்டோருக்கு இந்த ஸ்மாட் தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை கடந்த ஓக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றவுள்ளதால் தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் 3 மொழிகளிலும் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான விண்ணப்பதாரர்களின் புகைப்படம் உரிய தரம் தொடர்பான பிரிவின் சிபாரிசுக்கு அமைவாகவே இது பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதேவேளை எதிர்வரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையில் சம்பந்தப்பட்டவர்களின் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்படுகின்றது.

இதற்கு வசதியாக சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *