ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் மருத்துவர்கள் சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிலுனர் மருத்துவர்கள் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு சேவையில் அமர்த்தப்படாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் பணிப்புறக்கணிப்பால் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு இல்லை என மருத்துவமனையின் பணிப்பாளர் தனுஸ்க பெரேரா தெரிவித்துள்ளார்.