களுத்துறையில் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்கள் இடம்பெயர்வு…
களுத்துறை திப்பட்டாவ மூகலான மலையில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்று அதிகாலை மண்மேடுகளும் கற்களும் பாரிய சப்தத்துடன் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதி மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.