(காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்)
மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் பதுளை மாவட்டத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு, 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நிலவும் எனவும் ஹம்பாந்தொடை, மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.