(நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்தினால் கண்களுக்கும் பாதிப்பு)
நாட்டில் நிலவுகின்ற அதிக வெப்பத்துடன் கூடிய சூரிய ஒளி காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சி எச்சரிக்கையை கட்புல மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய கண்ணாடிகளை பயன்படுத்துவது நன்று எனவும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
இதேவேளை நாட்டில் நிலவி வரும் வரட்சி காரணமாக இதுவரை 06 மாவட்டங்களில் 03 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம், பொலனறுவை, புத்தளம், மன்னார், குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிக வரட்சி நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும் அதிக வரட்சி நிலவுகின்ற போதிலும் மக்களுக்கு குடிநீர் வசதிகளை தொடர்ந்தும் தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ. அன்ஸார் மேலும் தெரிவித்துள்ளார்.