• Fri. Nov 28th, 2025

உங்கள் மனைவியுடன் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும். ..!

Byadmin

Dec 16, 2017

உங்கள் மனைவியுடன் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும். ..!
==================================================
வரவேற்பரையில் அவளுக்குத் தூக்கம் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், அவளை உங்கள் படுக்கையறைக்குத் தூக்கிச் செல்லுங்கள். அதிக அளவில் அவள் ஒரு குழந்தை போல எண்ணச் செய்யுங்கள். உண்மை என்னவெனில், ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனால் இரண்டு வயதுள்ள சிறுமியைப் போன்றே உபசரிக்கப்பட வேண்டும் என்கிறது உளவியல்.
சில வேளை உங்கள் மனைவியர் உங்களிடம் சிறுபிள்ளைத் தனமாகவும், செல்லமாகவும் நடந்து கொள்கிறாள். அவர்களை அன்புடன் அரவணையுங்கள். வேறு யாரிடம் அவள் அவற்றை எதிர்பார்க்க முடியும் என்பதை சிந்தியுங்கள்.

நீர் உமது மனைவியுடன் கருத்து முரண்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், அடுத்து அவள் செயற்பாடு என்னவாக இருக்கும். அநேக பெண்கள் அவரது பைகளைத் தூக்கித் தாய் வீடு செல்லத் துணிவர். அதன் அர்த்தம் அவள் விவாகரத்து கேட்டு நிற்பதல்ல. அதுவே அவளது சிறு பிள்ளைத் தனம் என்பதை உணருங்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம், அவளைப் பற்றிப் பிடித்து, அவள் கண்களை நோக்கி “ஏசியதற்கு என்னை மன்னித்து விடு” எனக் கூறுங்கள். அவள் மீது பத்து மடங்கு அன்பைப் பொழிந்தால், அவள் இருபது மடங்கு அன்பைக் காட்டுவாள். அது தான் பெண்மை.

அப்பெண் உங்களுக்காகவே படைக்கப்பட்டவள். ஒவ்வொரு சகோதரரும் திருமணம் செய்து கொள்ள முன், பெண்களின் உளவியல் பற்றி கட்டாயம் கற்க வேண்டும். பெண்கள் பற்றிய நூல்களை வாசிக்க வேண்டும். அவர்கள் பற்றி இறைவனும், தூதர்(ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ள விடயங்களைக் கற்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடனான வாழ்வில் கடின பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

திருமணம், முறையான வாழ்க்கை முறை, பிள்ளை வளர்ப்பு, திருமணச் சட்டங்கள் என்பன பற்றிய அறிவின்றி வெறுமனே திருமணத்தில் குதிக்க வேண்டாம்.

ஒருமுறை உமர்(ரழி)அவர்களின் மனைவி, தன் குரலை உச்சளவில் உயர்த்தி அவரை நோக்கிக் கத்திக் கடிந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒருவர் அவரது வீட்டுக்கு வந்தார். அவர் வந்த காரணத்தைக் கேட்டார் உமர். அம்மனிதர் எவ்விடயம் பற்றி முறையிட வந்தாரோ அவ்விடயத்தை (மனைவி பற்றிய முறைப்பாடு) உமரின் வீட்டில் கண்ட மனிதர் திகைத்து நின்றார். உமர் அம்மனிதரை அழைத்து விளக்கினார்: “என் மனைவி என் வீட்டைப் பற்றி கரிசனை கொள்கிறாள், உணவைத் தயாரிக்கிறாள், என் குழந்தைகளுக்கு உணவூட்டுகிறாள், என்னையும் கவனிக்கிறாள், இது பற்றியெல்லாம் அவள் அலட்டிக் கொள்வதே இல்லை, அவ்வாறிருக்க அவளது சிறு குறையை நான் பெரிது படுத்தலாமா?

சகோதரரே, அவ்வாறே உங்கள் மனைவியையும் வழி நடத்துங்கள், சுப்ஹானல்லாஹ்!!!! அவனது படைப்பில் எந்தக் குறையையும் காணாதீர்கள், அவளை அன்பாகவும், பொறுமையுடனும் நடாத்துங்கள்.

உமர் கூறினார், உங்கள் துணை கோபமாக இருந்தால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஒருவர் நெருப்பாக இருக்கும் பட்சத்தில், அடுத்தவர் நீராகவே இருக்க வேண்டும்.

சகோதரர்களே, உம் மனைவி உம் பாதத்தில், வேண்டுமென்றோ, தவறியோ அடித்தால்; உம் கண்கள் கோபத்தால் சிவக்க வேண்டாம். அவளைப் பார்த்து புன்னகை செய்யுங்கள். தவறுதலாகப் பட்டிருந்தால் அவள் குற்றம் எதுவுமில்லை: வேண்டுமென்று செய்திருந்தால் அவள் உங்களுடன் விளையாடிப் பார்க்க நினைத்திருப்பாள்.

உங்கள் மனைவி மாருடன் ஒளிந்து பிடித்து விளையாடுங்கள்
(அண்ணலாரின் வழி முறை அது), வீட்டிலோ, தோட்டத்திலோ அவளுக்காக கவிதை, பாடல் படியுங்கள், வீட்டில் அவளுக்கு ஒத்தாசையாக இருங்கள், எப்போதும் அவளுக்குக் கட்டளையிடும் எஜமானாகவே இருக்க வேண்டும் என எண்ணாதீர்கள், மனைவியுடன் ஒன்றாகக் குளியுங்கள்
(அன்னலாரும், ஆயிஷா நாயகியும் குளிக்கும் வேளையில் இருவரது கோப்பைகளும் ஒன்றுடனொன்று முட்டிக் கொள்ளுமாம்), வசதியிருப்பின் அவளுடன் சேர்ந்து நீந்தக் கூடச் செய்யுங்கள், அவளை தொழுகைக்காக எழுப்பி விடுங்கள், முடியுமான வேளையில் ஒன்றாக சமையுங்கள், அவளுக்கு சமைக்கத் தெரியாவிடின், நீங்கள் அறிந்தவற்றை அவளுக்குக் கற்றுத் தாருங்கள். அவளது அறிவின் வளர்ச்சிக்கு துணை நில்லுங்கள், அவளது திறமைகளை மனதாரப் பாராட்டுங்கள். அவளது அன்பு எந்தளவு உங்களுக்கு தேவை என்பதை அவளிடம் கூறுங்கள். உங்களைப் பற்றி அனைத்து விடயங்களையும் (தொழில், நோய்கள், கடன்கள், பிரச்சினைகள், சந்தோசம், பதவி உயர்வு) அவளிடம் கலந்துரையாடுங்கள். அவள் உங்கள் துணை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவளது குறைகளை உங்கள் குடும்பத்தாருடன் கலந்துரையாடுவதை முற்றிலும் தடுத்து கொள்ளுங்கள், இது விபச்சாரத்தை விட கொடிய பாவமாகும். ஒருவருக்கொருவர் ஆடையாக இருந்து கொள்ள வேண்டும்

அவளது கண்களைக் கட்டி விளையாடுங்கள், அவசர வேலையில் ஈடுபட்டுள்ள ஓர் சந்தர்ப்பத்தில் அவளை அழைத்து முத்தமிட்டு அனுப்புங்கள், அடிக்கடி இயன்ற போது குறுந்தகவல் அனுப்பலாம், வேலைக்குச் செல்லும் போது: அவள் பர்ஸ், அலுமாரி, அல்லது தலையணைக்குக் கீழ் ஒரு துண்டில் “ஐ லவ் யூ” என்று எழுதி வைத்துச் செல்லலாம், இவை யாவும் ரொமாண்டிக் இன் ஒரு பகுதியே. அவள் இவற்றை தன் கணவனிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். ரொமான்ஸ் என்பது படுக்கையில், அந்த ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே அல்ல. அவள் மீதுள்ள அன்பை உயிருடன் இருக்கும் போதே உணரச் செய்யுங்கள், தெரிவியுங்கள், மகிழ்வியுங்கள். அவள் பிரார்த்தனைகளுக்குச் சொந்த காரனாகுங்கள். அவள் வழி தவறிச் செல்வதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனப்பூர்வமாக தன் கணவர் தனக்குக் கிடைத்த பெறும் அதிர்ஷ்டம் என்பதை உணரச் செய்ய முடிந்தால், உங்களை விடச் சிறந்த கணவன் யாராக இருக்க முடியும்.

அடுத்து சகோதரிகளே, ரொமாண்டிக் இன் ஒரு பகுதி உங்களுடையது, உங்கள் கணவர் மீதான அன்பை, காதலை வெளிப் படுத்த வெட்கப் பட வேண்டாம்.. அவர் வேலைக்குச் சென்றுள்ள போது இனிய குறுந்தகவல்களைப் பரிமாற்றம் செய்யுங்கள்.

உணவு உண்ணும் போது அவருக்கு ஒரு குழந்தைக்கு உணவளிப்பது போன்று ஊட்டி விடுங்கள், அன்பைப் பரிமாறுங்கள்.
கணவன்-மனைவி ஓர் அற்புத உறவு. வாழும் வாழ்க்கை குறுகியது. சந்தோசமாக வாழுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *