• Sat. Oct 11th, 2025

எவ்வளவோ பாவம் செய்கிறோம், ஆனால் அல்லாஹ் நம்மை தண்டிப்பதில்லையே?

Byadmin

Dec 15, 2017

மாணவர் ஒருவர் தன்னுடைய ஆசிரியரிடம் நாம் எவ்வளவோ பாவம் செய்கிறோம், ஆனால் அல்லாஹ் நம்மை தண்டிப்பதில்லையே? என்றார்.

அதற்கு ஆசிரியர் சொன்னார் : அல்லாஹ் உன்னை பல்வேறு வகையில் தண்டிக்கிறான் ஆனால், அதை நீ உணர்ந்து கொள்வதில்லை.

அல்லாஹ்விடம நெஞ்சுருக உரையாடுகின்ற இனிமையான அந்த உணர்வை உன்னிடமிருந்து அவன் பறித்துக் கொள்ளவில்லையா?

அல்லாஹ்வின் முன் கதறி அழமுடியாத இறுகிய உள்ளத்தை விட வேறு எந்த பெரிய பாவத்தாலும் அல்லாஹ் சோதிப்பதில்லை.

குர்ஆனின் ஒரு பக்கத்தை கூட ஓதாமல் உன்னுடைய நாட்கள் ஓடுவதில்லையா?

இந்த குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கினால் அது நடுநடுங்கி அல்லாஹ்வின் அச்சத்தால் சுக்கு நூறாகி சிதறி விடும் என்ற அல்லாஹ்வின் வசனத்தை சில நேரம் நீ கேட்டிருப்பாய்.

அந்த வசனத்தை செவி மெடுக்காததை போன்று எந்த பாதிப்பும் இல்லாமல நீ சென்று கொண்டிருப்பதில்லையா?

நீண்ட இரவுகள் உன்னை கடந்து செல்கின்றன. அதில் சிறிது நேரம் கூட நின்று தொழாமல் நீ தடுக்கப்பட்டுவிடவில்லையா?

ரமலான், ஷவ்வாலின் ஆறு நாட்கள், துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என நல்ல காலங்கள் உன்னை கடந்து செல்கின்றன. அவைகளை அவன் விரும்புகின்ற விதத்தில் நீ பயன்படுத்துகின்ற தவ்ஃபீக் உனக்கு கிடைக்காமல் போய் விட்டதை உணரவில்லையா?

இதை விட பெரிய தண்டனை என்ன இருக்கிறது??

வணக்க வழிபாடுகள் உனக்கு கடினமாக தோன்றவில்லையா??

அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும் உன்னுடைய நாவு தடுக்கப்படவில்லையா??

மன இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் முன்னால் நீ பலகீனமாகுவதை உன்னால் உணரமுடியவில்லையா??

பொருள், பதவி, பிரபல்யம் ஆகவேண்டும் என்ற பேராசைகளால் நீ சோதிக்கப்படவில்லையா??

இதை விட பெரிய தண்டனை என்ன இருக்கிறது??

புறம் பேசுதல், கோள் மூட்டுதல், பொய் சொல்லுதல் போன்ற பாவங்கள் புரிவது உன் மீது லேசாக ஆக்கப்படவில்லையா??

மறுமையை மறக்கடித்து இந்த உலக வாழ்கையை உன்னுடைய பெரிய கவலையாக ஆக்கப்படவில்லையா??

இதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையில்லாமல் வேறென்ன??

என்னருமை மகனே! எச்சரிக்கையாய் இரு..

அல்லாஹ் கொடுத்த தண்டனையில் மிக இலகுவானது பொருட்செல்வத்திலும் மக்கள்செல்வத்திலும் உனக்கு ஏற்படும் நட்டத்தில் எதை நீ தண்டணையாக உணர்கிறாயோ அவைகள்தான்,

அல்லாஹ்வின் தண்டனைகளிலே மிக மோசமானது உள்ளத்தால் உணரப்படாமல் இருப்பது தான்..

யா அல்லாஹ்,
உன் கருணையின் மீது நம்பிக்கை வைத்துக் கேட்கின்றோம்,

உன்னை நினைவு கூறாது செலவு செய்த ஒவ்வொரு நொடிக்காகவும் எங்களை மன்னிப்பாயாக..

எங்கள் உள்ளங்களில் ஈமானை பலப்படுத்துவாயாக, முஃமினாக எங்களை மரணிக்கச் செய்வாயாக.
🍂🍃🍂🍃🍂🍃🍂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *