• Fri. Nov 28th, 2025

+கடன்களை அடையுங்கள்+ (இன்றைய சிந்தனைக்கு …!)

Byadmin

Dec 15, 2017

+கடன்களை அடையுங்கள்+ (இன்றைய சிந்தனைக்கு …!)

 

நீங்கள் கடனாளி எனில்,
அது எத்துணைப் பெரிதாக
இருந்தாலும் சிறிதாக
இருந்தாலும் அவற்றைத்
திருப்பிக் கொடுக்க
இப்போதே திட்டமிடுங்கள்..!

ஒரு நிமிடமும்
இதற்காகத் தாமதிக்க
வேண்டாம்..!

‘கடன்’ என்பது ஒரு வலி;
அது ஒரு சுமையும் கூட..!
அதனை –
நிறைவேற்றவில்லையேல்
அதற்காக மிகப்பெரிய
பலனைத் திருப்பிக்
கொடுக்க வேண்டியிருக்கும்..!

நினைவில் வையுங்கள்:
👇🏽👇👇👇🏽
நீங்கள் ‘ஹஜ்’
செய்திருந்தால்கூட,
நீங்கள் யாருக்காவது
கடனாளியாக இருந்தால்
உங்கள் ‘ஹஜ்’ ஏற்றுக்
கொள்ளப் படாமல்
போகலாம்..!

எம் பெருமானார்,
கடனாளியின்
ஜனாஸாவுக்குத்
தொழ வைக்க
முன்வராததை
எப்போதும்
நினைவில் வையுங்கள்..‼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *