யாழில் மீன் மழை
யாழ்ப்பாணம் நல்லுார் நாயன்மார்கட்டுப் பகுதியில் பெருமளவு மீன்கள் மழையாகப் பொழிந்துள்ளன.
நேற்று(11) நண்பகலுக்குப் பின்னர் பெய்த மழையின் போதே இவ்வாறு மீன் மழை பொழிந்துள்ளதாக பிரதேச வாசிகள் குறிப்பிட்டனர்.
ஏற்கனவே இவ்வாறு யாழில் சில பகுதிகளில் மீன் மழை பொழிந்த நிலையில் நேற்றும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்-