அளுத்மாவத்தை வீதியில் ஆர்ப்பாட்டம்…
கொழும்பு – 15 அளுத்மாவத்தை வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – 15 ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்தி வரையிலான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் அவ் வீதியூடாக பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டத்தை இன்று(12) முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு மாநாகர சபையும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் வீதி அதிகார சபையும் கவனத்தில் எடுத்து குறித்த வீதியை சீர் செய்துதர வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.